Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 19 May 2014

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன.

மதிப்பெண்ணை சரிபார்த்தல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்றது.

பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 21-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு சனிக்கிழமையே னுப்பப்பட்டுள்ளன.

இந்தச் சான்றிதழ்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment