ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1643 விடுதிகள் உள்ளது. இதில், ஆதிதிராவிட மாணவிகளுக்கு 466 விடுதி, பழங்குடியினத்திற்கு 16 விடுதி, உறைவிடப்பள்ளிக்கு 10 விடுதி என 582 விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளில் பெரும்பாலானோர் கிராமப்புறப்பகுதியில் இருந்து வந்து தங்கி படித்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவியருக்கு நாப்கின், பாய், போர்வை, விடுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி மற்றும் மாணவியருக்கு சோப்பு, எண்ணெய்கள் போன்றவற்றிற்காக மாதம் 50ம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவிகள் சிரமமின்றி துணி துவைக்கும் வகையில் விடுதிகளில் வாஷிங்மெஷின் வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக 2.88 கோடி அரசு நிதி ஒதுக்கியது. முதற்கட்டமாக 80 மாணவியர் விடுதிகளில் வாஷிங்மெஷினுக்கு பிப்ரவரி இறுதியில் டெண்டர் கோரப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் டெண்டர் விடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் வருகிற ஜூன் முதல்வாரத்தில் டெண்டர் விட்டு உடனடியாக முடிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து முதற்கட்டமாக வருகிற ஜூலை இறுதிக்குள் 80 மாணவியர் விடுதிகளில் வாஷிங் மெஷின் வழங்க ஆதிதிராவிட நலத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கூறும் போது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் வாஷிங் மெஷின் டெண்டர் விடும் பணி உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெண்டர் பணிகள் விட்டு முடிக்கப்படும். இதைதொடர்ந்து 80 ஆதிதிராவிட மாணவியர் விடுதிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் வாஷிங் மெஷின்கள் வழங்கப்பட்டு விடும் என்றார்.
No comments:
Post a Comment