Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 19 May 2014

TELC கல்வி நிறுவனங்கள்: 3000 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிப்பது யார்?


திருச்சி, : ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகளை நிர்வகிப்பது யார் என்று டிஇ எல்சி பிரச்னையில் நீதி விசாரணை நடத்த வேண்டு மென டிஇஎல்சி செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள் ளார். 
திருச்சி மேலப்புதூர், தரங்கைவாசத்தில் தலைமையிடமாக கொண்டு டிஇஎல்சி (தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை) இயங்கி வருகிறது. இந்த திருச்சபைக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகம், ஆந் திரா, அந்தமான் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளது. இவற்றின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி யாகும். இந்த சொத்துக்கள் அனைத்தும் டிஇஎல்சி திருச்சபை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனை சங்க நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டதாகும். இதற்கிடை யில் இந்த டிஎல்இசி நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த திருச்சபையின் சொத்துக் களை நிர்வாகிப்பதற்கு இருதரப்பினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் 
ஓய்வுபெற்ற பேராயர் மார் டின் என்பவர் டிஇஎல்சி சொத்துக்களை போலி ஆவணம் மூலம் விற்றுள்ளதாக மற் றொரு தரப்பான சார்லஸ் என்பவர் கூறி வரு கிறார். போலீசில் அளித்த புகார் மற்றும் அதன் மீது பதிய எப்ஐஆர் நகல்களை அளித்து வருகின்றனர். 
இதற்கிடையில் மற் றொரு பிரிவினரான டிஇ எல்சி செயலாளர் ரவீந்தி ரன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், டிஇஎல்சிக்கு 3.1.2013ல் தமிழக அரசின் அரசாணையின்படி தேர் தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மாறாக மற்றொரு தரப்பினர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தினர். இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தின் உத்தரவே இறுதியானது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 26.2.13ல் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் சார்லஸ் தரப்பில் எட்வின் ஜெய குமார் என்பவரை தேர்ந்தெடுத்து 14.1.14ல் பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மாயவரம் சப்கலெக்டர் தடை விதித்தார்.
இதைதொடர்ந்து உயர் நீதிமன்றத்தை நாடிய சார் லஸ் தரப்பினர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த மாதம் 19ம் தேதி (இன்று) எட்வின் ஜெயகுமாருக்கு பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை டிவிஷன் பெஞ்ச் முன் தொடரப்பட்ட வழக்கில் பட்டாபிஷேகத்திற்கு நீதிபதிகள் மணிகுமார், வாசுகி தலைமையிலான பெஞ்ச் தனி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடைவிதித்தது. சார்லஸ் மீது போலி பாஸ் போர்ட் உள்ளிட்ட பல் வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் சார்லஸ் தரப்பினர் டிஇஎல்சிக்கு சொந்தமான விழுப்புரம், ஊட்டி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்றுள்ளனர். 
இதையடுத்து ரூ.3 ஆயிரம் கோடி சொத்துள்ள டிஇஎல்சியில் நடந்து வரும் பிரச்னையில் தலையிட்டு தமிழக அரசு நீதி விசா ரணை நடத்த வேண்டும். 
மேலும் பேரா யர் நியமனத்தில் சட்டப்படி யான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment