Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 6 May 2014

நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல் கலைக்கழகங்கள் உள்ளன.நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட் டது.இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என். தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண் டது. அப்போது 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலித்து தரமற்ற கல்வியை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங் களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத் தப்பட்டது. இதை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங் கள் மேல்முறையீடு செய்தன.இந்நிலையில், 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம், உள்கட்டமைப்பு ஆகியன வற்றை ஆய்வு செய்து வரும் ஜூலை 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் மட்டும் 17 நிகர்நிலை பல் கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment