Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 11 May 2014

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் பள்ளி கல்வித்துறை உத்தரவு


அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க வேண்டும்’ என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போது ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமலில் உள்ளது. அப்படி இருந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேச வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் அவர்களை சேர்க்கின்றனர்.

இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கடந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் காரணமான மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்தனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

2012-2013ம் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வி மாதிரி திட்டமாக கொண்டுவரப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் 4 ஆயிரம் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அப்போதே பல பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பள்ளியிலும் ஆங்கில வழிக்கல்வி வேண்டும் என்று கேட்டனர். இதை ஏற்று வரும் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வி வகுப்பை தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. பள்ளி தொடங்கும் நாளிலே ஆங்கில வழிக்கல்வியை தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட உள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment