Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 15 July 2014

1-வது வகுப்பு மாணவருக்கு கணக்கு எளிதில் புரிய கையேடு


1-வது வகுப்பு மாணவருக்கு எளிதில் கணிதம் கற்பிக்க ‘கணக்கு கையேடு 1-ம் வகுப்பு’ என்ற புத்தகத்தை சென்னை எழும்பூரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மு.கனகவல்லி எழுதி உள்ளார்.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பொன் விழா கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த புத்தகத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெளியிட்டார். அதை மாநகராட்சி கல்வித்துறை இணை ஆணையர் ஆர்.லலிதா பெற்றுக்கொண்டார். ஆசிரியர் மு.கனகவல்லி ஏற்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் கல்வி அதிகாரி பேரின்பராஜ், ஆசிரியர் பூமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் கண்ணம்மாபேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். மஞ்சக்கொல்லை சென்னை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசெல்வி நன்றி கூறினார்

No comments:

Post a Comment