Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 20 July 2014

60 ஆண்டுகளாக மாணவர்களுக்குச் சீருடை வேட்டி- வெள்ளைச் சட்டை


நாட்டின் உயர்வகுப்பு கிளப்கள் வேட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை பள்ளி ஒன்று 60 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வேட்டியை சீருடையாக வைத்துச் செயல்பட்டு வருகிறது.

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ அகோபில மடம் மேனிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து வருவதே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் வேட்டியே அணிந்து வரவேண்டும். 

இது குறித்து அகோபில மடம் பள்ளியின் முதல்வர் உமா, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

1953ஆம் ஆண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது முதலே வேட்டி, வெள்ளைச் சட்டை சீருடையே நடைமுறையில் உள்ளது. வேதபாடம் கற்பிப்பது உள்ளிட்ட வேட்டி-சட்டை அணிந்து வருதல் என்று பண்பாட்டுச் சின்னங்களை பேணி காத்து வருகின்றோம்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவினர்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து தரப்பினரும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். அனைவரும் வேட்டி-சட்டைத் தான் அணிந்து வரவேண்டும்.

மாணவிகள் பாவாடை-தாவணி சீருடையே அணிந்து வரவேண்டும்”

இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

Post a Comment