Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 July 2014

புலம்பும் தலைமையாசிரியர்கள்


குறு வட்ட, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், விளையாட்டுக்கான நிதியை வழங்காததால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்தாண்டு முதல் குறு வட்ட, மாவட்ட, மண்டல, மாநில தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அரசு நிதி வழங்குகிறது. குறு வட்ட போட்டிகள் ஜூலையில் துவங்கும் என்றாலும், கடந்தாண்டுக்கான ரூ.10 கோடி நிதி, இந்தாண்டு ஜனவரியில் கிடைத்தது.

தற்போது இந்த கல்வியாண்டுக்கான குறுவட்ட போட்டிகள் அந்தந்த மாவட்ட அளவில் சிலநாட்களில் நடக்கவுள்ளன. அரசு நிதி வழங்குவதால் அரசுப் பள்ளிகளில் தான் போட்டிகள் நடக்க வேண்டும். அதுவும் அரசுப் பள்ளிகளே போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளை காண்பதன் மூலம், உற்சாகமடைந்து போட்டிகளில் பங்கேற்பர் என்ற அரசின் நோக்கம் சரிதான்.ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. மைதானம் இருக்கும் பள்ளிகளும், மற்ற பள்ளிகளை விட துாரத்தில் இருக்கின்றன. இதற்கு முன் போட்டிகளை முன்கூட்டியே பணம் செலவழித்து, தனியார் பள்ளிகளே நடத்தின. அரசுப் பள்ளிகளில் அரசின் நிதி வருவதற்கு முன், யார் பணம் தருவது என்ற குழப்பம் நிலவுகிறது.

குறுவட்ட போட்டிகள் துவங்கும் முன்பே, அந்தந்த மாவட்டத்திற்கான நிதியை அனுப்பினால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சிரமமின்றி போட்டிகளை நடத்துவர்.

No comments:

Post a Comment