Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 17 July 2014

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?


தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங்அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. 

உயர், மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17) சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment