தலைமை ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்கும் போது நிர்வாக அனுபவம் இல்லாததால் தவறான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க 46 தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். நிர்வாக அனுபவம் இல்லாத அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கும் போது அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் நிர்வாக அனுபவம் இல்லாத நிலையில் பல தவறான முடிவுகள் எடுக்கப்படும் நிலையும் உள்ளது.
எனவே மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்படுவதற்கு முன் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில கல்வியல் மேலாண்மை நிர்வாக பயிற்சி நிறுவனம் மூலம் 15 நாள் நிர்வாகம் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு 27 அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 19 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்கள் என 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்டமாக இன்று முதல் 16ம் தேதி வரை மாநில கல்வியியல் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி நிறுவன மாநாட்டு அரங்கில் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை ஆசிரியர் விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ள பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment