Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 4 August 2014

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு


பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும். 

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment