Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 11 August 2014

அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்: 

அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது Broadband Services மற்றும் இதர இணையதள சேவைகள், அதாவது Internet Services ஆகியவற்றையும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி வழங்கும். அகண்ட அலைவரிசை உரிமங்கள் பெற்று உள்ளவர்களுடன் இணைந்து வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பத்தின் கூடுதல் பயனை பொதுமக்களும், அரசுத் துறைகளும் அடைய வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" 

இலவச மடிக்கணியை சிறந்த முறையில் பயன்படுத்த...

தமிழ்நாடு முழுவதும், இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இம்மடிக்கணினிகளை சிறந்த முறையில் உபயோகப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப வளங்களை குறைந்த கட்டணத்தில் வழங்குவது அவசியமாகிறது. இளைஞர்களின் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான மேகக் கணினி சார்ந்த சேவைகள், அதாவது Cloud Services மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள், அதாவது Web-hosting Services ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment