பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது உள்ளிட்ட விபரங்களை தயார் செய்து தரவேண்டும் என்று கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய்தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வீராச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் டோராமற்றும் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், வரும் செப். 1ம் தேதி தென்மாவட்ட அளவிலான கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அமைச்சர், செயலாளர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில்2014-15ம் கல்வி ஆண்டிற்கான அனைத்துபணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். எனவே அதற்கான விபர அறிக்கைகளை தயார் செய்து அளிக்க வேண்டும். கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகளில் 70 சதவீதம் மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சிகுறைந்த பள்ளிகள், அதற்கான காரணம்என்ன, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என் பது போன்ற விபரங்களை தயார் செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பிட வசதி, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உள்ள கழிப்பிட வசதி, தேவையான குடிநீர் மற்றும்தண்ணீர் வசதி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளதா, நீர்த்தேக்க தொட்டியை கடைசியாக சுத்தம் செய்தது எப்போது என்பது போன்ற விபரங்களை தயாரித்து வழங்கவேண்டும். இலவச லேப்டாப் வழங்கிய விபரங்களை தரவேண்டும். வரும் 15ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும். கல்வியில் பின்தங்கிய 6முதல் 9ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளில் பலருக்கு வாசிப்புத் திறன் இல்லை. எனவே 10ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தாமல் 6 முதல் 9ம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவிகள் மீதும்கூடுதல் கவனம் செலுத்தி கல்வி கற்கஊக்குவிக்க வேண்டும். 9ம்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதில்மாணவ, மாணவிகளை ஆர்வமுடன் பங்கு பெறச் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment