Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 10 August 2014

அரசு பள்ளியை மூடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : சி.எம்.க்கு லெட்டர் போயிடுச்சு...DINAKARAN பீட்டர் மாமா.


ஸ்கூல்களை எல்லாம் மூடிண்டு வர்றாங்களே...அதென்ன விஷயம்...? சரியா நடத்தலேன்னு ஸ்டேட் முழுக்க சில பள்ளிகளை மூடறது வழக்கமானது தான்...ஆனா, இப்ப எதுக்காவது இடம் வேணுமின்னா பள்ளிகளை காலி செய்றதுதான் பேஷனாயிட்டு வர்றது. இதுக்கு அதிகாரிங்களும் உடந்தை... பள்ளிகளை கட்ட வேணாம்... மூடறது சரி தானா...கேட்கவே ஆளில்லையா...? குமரி மாவட்டத்துல தோவாளை பகுதில இருந்த ஒரு அரசு பள்ளியை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கற இன்னொரு அரசு பள்ளியோட இணைச்சிட்டாங்க...இதனால பள்ளி குழந்தைங்க ரோடை கடந்து போய் படிக்க வேண்டிய சிரமம் இருக்கு... எதுக்காக அப்படி செய்தாங்க...? ஏதோ காரணம் சொல்லி காலி செஞ்சிட்டாங்க. ஆனா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட ஆளும் கட்சில சில பேரு பிளான் போட்டுட்டாங்க...இதுக்கு கல்வித்துறை அதிகாரிகள் சில பேரும் சீக்ªரட்டா கைமாத்தறாங்க... சிஎம் கவனத்துக்கு கொண்டு போக வேணும்...
சிஎம் தான் காப்பாத்தணும்ன்னு கேட்டு பேரன்ட்ங்க எல்லாரும் கூட்டா லெட்டர் போட்டிருக்காங்க...பார்ப்போம் நல்லது நடக்கட்டும்... என்று ஆதங்கத்துடன் முடித்தார் பீட்டர் மாமா.

No comments:

Post a Comment