Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 9 September 2014

மாணவர்களின் விடைத்தாளில் மிக நன்று, மோசம் என்று கருத்து தெரிவிக்கக்கூடாது: சி.பி.எஸ்.இ உத்தரவு


மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப மிக நன்று, நன்று, மோசம், கவலை அளிக்கிறது என ஆசிரியர்கள் குறிப்பு எழுதி வந்தனர். வருங்காலங்களில் ஆசிரியர்கள் கமென்ட் எழுதக்கூடாது. மாறாக மாணவர்களை கவரும் வகையில் நட்சத்திரம், ஐந்து நட்சத்திரம், சித்திரங்கள் (கார்ட்டூன்) போன்றவற்றை குறிப்பிட்டு ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஒரு தேர்வில் சரியாக படிக்காத மாணவர்கள் கூட மறு தேர்வில் நன்றாக படித்து விடையளிக்க முடியும்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மத்தியில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை நீக்கலாம். இதேபோல் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கலாம். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment