Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 2 February 2014

ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு :திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தகவல்


 "ஆதார் அடையாள அட்டை, தபால் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், இணைய தளம் வாயிலாக, ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடந்தது. கடந்த டிச., மாதம், முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பதிவு முகாம் நடந்ததால், கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும், இடைப்பட்ட காலத்தில் குடிபெயர்ந்தவர்களாலும் பதிவு செய்ய முடியவில்லை.
விடுபட்ட நபர்கள் பயனடையும் வகையில், இரண்டாம் கட்ட முகாம், பிப்., இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. அதற்காக, அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வரி வசூலிப்பு மையங்களில், படிவம் பெற்று வரும் 7ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என்பதால், அருகில் உள்ள பள்ளிகளில் படிவம் வழங்கப்பட்டு, திரும்ப பெறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 15 லட்சத்து 700 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இது, 67 சதவீதம். பெரும் பாலான மாவட்டங்களில், முதல் கட்ட முகாமில், 70 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், வேறிடங்களுக்கு குடிபெயர்வது அதிகளவில் நடப்பதால், மூன்று சதவீதம் குறைவாக நடந்துள்ளது.
ஆதார் பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதத்துக்குள் டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து, அவரவர் வீடுகளுக்கு தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் குறிப்பிட்டிருந்தால், அட்டை தயாரானதும், எஸ்.எம்.எஸ்., அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு ஆதார் அட்டைகள் கிடைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இதுவரை அட்டை குறித்த விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், ஆதார் பதிவு செய்துவிட்டு, அடையாள அட்டைக்காக காத்திருப்பவர்கள், இணைய தளம் மூலமாக அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆதார் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
மொபைல் போன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஆதார் அட்டை குறித்த தகவல் அனுப்பப்படுகிறது. http://resident.uidai.net.in/web/resident/chekaadhaarstatus என்ற இணைய தள முகவரியில் சென்று தங்களது கார்டு விவரங்களை கண்டறியலாம். ஆதார் அட்டை பதிவை உறுதி செய்த பிறகு,http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்களை கொடுத்திருந்தும், அட்டை தவறாக இருந்தால், http://resident.net.in/updatedata என்ற இணைய தள முகவரியில் சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும், ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்தனியாக ஆதார் எண் வழங்கப்படுவதால், தபால் மூலமாக அட்டை கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் கூட, இணைய தளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, 1800 300 1947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், பதிவு முகாம்களில் வழங்கப்பட்ட ஒப்புகை சான்றுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், என்றனர். எஸ்.எம்.எஸ்., எப்படி? மொபைலில், uid (இடைவெளி) status (இடைவெளி) என்று டைப் செய்தபின், பதிவு முகாமின்போது வழங்கிய ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். சிறிது நேரத்தில், ஆதார் அட்டை தொடர்பான தகவல் அனுப்பப்படுகிறது.

தேர்வில், 'பிட்' அடிக்க, தேர்வு மையங்களே மாணவர்களுக்கு உதவும் அநியாயம்

தேர்வில், 'பிட்' அடிக்க, தேர்வு மையங்களே மாணவர்களுக்கு உதவும் அநியாயம், ஆந்திராவில் நடக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில், கர்நாடக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் (ஸ்டடி சென்டர்) உள்ளது. இங்கு, இரண்டு நாட்களுக்கு முன், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தேர்வுகள் துவங்கின. ஒரு வாரம் நடைபெற உள்ள தேர்வுகள், ஊருக்கு ஒதுக்கு புறமான, மூடப்பட்ட ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் துவங்கியது. இதில், கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த பலர், காலையும், மாலையும் தேர்வு எழுதுகின்றனர். அந்த மையத்தின் நிர்வாகிகள், தங்கள் மையத்திற்கு சிறந்த பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவர்களுக்கு கைடு, பாட புத்தகங்கள், 'பிட்' பேப்பர்களைக் கொடுத்து, காப்பியடித்து, தேர்வெழுத அனுமதியளித்துள்ளனர். மேலும், மாணவர்களை அருகருகே அமர வைத்தும், பார்த்து எழுதவும் அனுமதி அளித்துள்ளனர். பல்கலைக்கழகத்திலிருந்து வந்த, கண்காணிப்பு அதிகாரிகளையும் தனியாக, 'கவனித்து'ள்ளனர். இதில், 'கைடுக்கு ஒரு ரேட், பிட்டுக்கு ஒரு ரேட்' என, மாணவர்களிடம் வசூலித்துள்ளனர். வேலையில்லா மாணவர்கள், உயர் பதவி பெற தேர்வெழுதும் ஊழியர்கள் என, ஏராளமானோர், இந்த மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதனால், மேலும், இது போன்ற மையத்தில், படிப்பு வராவிட்டாலும், டிகிரி பெறுவது எளிது என்பதால், உண்மையில் படிப்பவர்களுக்கும் மதிப்பில்லாமல் போகிறது. இது போன்ற கல்வி மையங்கள் மீது, அந்த பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு பணி வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் 90 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசு பணி வேண்டி, 90 லட்சத்து, 13 ஆயிரத்து, 163 பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பதிவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, அனைத்து அரசு பணிகளும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில், அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

குளறுபடி:




தேர்வு முடிவு வெளிவந்தவுடன், வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கு, அளவுக்கதிகமாக மாணவ, மாணவியர் குவிந்து விடுவதால், பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் குளறுபடிகளால், அவதிக்கு உள்ளாகினர். இதனால், மாணவ, மாணவியர் சிரமங்களை குறைக்கும் வகையில், அந்தந்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் ஆன் - லைன் மூலம், பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் என, அனைத்து நடவடிக்கைகளும் எளிமையாக்கப்பட்ட நிலையில், பதிவு செய்ய, கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை மாறியது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு, அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்து இருக்கின்றனர். இதில், 45 லட்சத்து 12 ஆயிரத்து 169 பேர் பெண்கள். இதில், பத்தாம் வகுப்புக்கு கீழ், 5 லட்சத்து 77 ஆயிரத்து 694 பேரும், பத்தாம் வகுப்பு முடித்து, 31 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேரும், பிளஸ் 2 கல்வித்தகுதியில், 22 லட்சத்து 66 ஆயிரத்து 195 பேரும், பதிவு செய்துள்ளனர். இதற்கு அடுத்து இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 6 லட்சத்து 67 ஆயிரத்து 962 பேர் பதிவு செய்துள்ளனர். பட்டப்படிப்பு படிப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பில், 11 லட்சம் பேரும், முதுகலை பட்டப்படிப்பில், 2.5 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர்.

அலட்சியம்:




வேலைவாய்ப்பு அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்டப்படிப்பு படித்தவர்கள் பதிவு செய்வதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும், பட்டப்படிப்பு முடிக்கும் ஆண்களிடம், இந்த அலட்சியம் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில், அதிக அளவில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தாலும், அந்த அளவுக்கு பதிவு அதிகரிப்பதில்லை. மேலும், தற்போது அனைத்து பணியிடங்களும், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.ஆர்.பி., என, தேர்வு முறையில், நியமிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு பதிவு குறித்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

கல்விக்காக இடம்பெயர்ந்த 35 லட்சம் இந்தியர்கள்

:இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கை 35 லட்சம் பேர் என தெரியவந்துள்ளது.உள்ளூர்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் குறைவான வாய்ப்புகளே உள்ளதாலும் இந்திய மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் அதிபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.8சதவீதம் பேரும் உ.பி.,யில் 1.1 சதவீத மாணவர்களும் இடம் பெயர்ந்துள்ளதாக குளோபல் நகர்புற இளைஞர் ஆய்வு ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது.

Saturday, 1 February 2014

நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் ஓட்டுகளை பெற 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் வர வாய்ப்பு அதிகம்? Merger of 50 percent DA may soon be considered by Central Government –Sources

Sources close to the Central Government Employees Federations told that Merger of 50% DA will soon be considered by Central Government before the budget session of Parliament in February 2014. According to the sources, the central government is likely to consider the central government employees  demand for merging of 50 % DA, for the reason that the DA will be crossing 100% level after January 2014.
Merger of 50 percent DA may soon be considered by Central Government –Sources
Merger of 50% DA
The rate of dearness allowance to be paid to govt servants has been increasing consistently due to the rise in the prices of essential commodities for the past two years. In 2011 the rate of DA was at 50 % level. Since then all the Federation demanded the central government to merge the 50 Percent DA with basic Pay. But the government did not accept this demand to merge the DA with basis pay, as it was not recommended by sixth CPC.

The demand would be considered in view of parliament elections

But federations kept on demanding the government that raising dearness allowance alone will not help to compensate the alarming rate of price rice. So they urged the government to consider their demand favorably. It is believed that after the defeat in the election of four state legislative councils, the UPA government has decided to reconsider about its decision on the issues which directly affects the common public. The high command of the ruling party thought that the reason for their defeat in the state election is mainly because of their government failed to contain the price rise. The gap between common public and UPA government has been considerably increased. To correct these failures the UPA government decides to do something to attract the voters.
After announcing the government’s proposal to constitute the 7th pay commission, the community of central government employees has been convinced to have soft view on this government. Further the 50 lakh central government employees would be made happy if the 50% DA is merged with Basic Pay. It is told that , as the central government staff association and federations demanding it very seriously, in case the government decides go with this demand, there will be around one crore voters will be in favour of UPA government. So the government may consider the demand of merging of 50% DA with basic Pay in view of forthcoming Parliament elections.

Allowances will have no impact on merging DA with basic Pay

The sources, associated with National Council JCM, said that the government initially was not willing to consider this demand as some allowance and advances have been raised by 25% whenever the DA crosses 50% level as per the sixth CPC recommendation. But federations insisted that the allowances, which are raised to 25 % level when DA crosses 50%, will have no impact on merging DA with basic pay. The only allowance will have an increase when Basic Pay increases are HRA. No other allowances will be increased and other entitlement of the respective Grade Pay will not be revised as the 50% DA to be merged will be kept under separate component like it was treated in 5CPC as Dearness Pay. “There is no need to worry about financial implications, as the 50% DA will be paid by just changing its nomenclature as Dearness Pay”, said sources.

50% DA merger to be decalered before DA crosses 100%

Further, it has been informed that it is good enough for the government to announce its decision before declaring the next additional installment of DA. Because the AICPIN for Industrial workers for the Month of December 2013 is awaited to determine the rate of dearness allowance to be paid from January 2014.The result of last 11 months AICPIN shows that DA will definitely be raised by 10 % from existing 90% level. So the rate of DA will be 100% with effect from 1st January 2014. After the DA increased to 100%, the demand for 50% DA merger will have to change its avatar. Probably the demand would be for 100% DA merger. So the federations expect the government may consider 50% DA merger soon.
However, decision if any in this regard should be taken before the announcement of election for parliament. It is expected that election announcement for parliament will be made by the end of February 2014. Before that,  the announcement of 50% DA merger is expected from central government.

தமிழக அரசின் தொழில் வரி சட்டங்கள் பற்றி அறிய

தமிழக அரசின் தொழில் வரி சட்டங்கள் பற்றி அறிய

Pls Click Here

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 25% க்கு குறையாமல் 35% க்கு மிகாமல் தொழில் வரியை உயர்த்திக் கொள்ளலாம். விதி எண் 13 ஐ பார்க்கவும்.

நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு


சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 138, 13 உட்பிரிவு(2)ன் படியும் நகரமன்ற தீர்மானத்தின்படியும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தொழில்வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரையாண்டிற்கான மொத்த வருமானம் ரூ21,001 வரை உள்ளவர்களுக்கு தொழில்வரி விதிப்பு இல்லை 
ரூ21,001 முதல் ரூ30,000 வரை உள்ளவர்களுக்கு ரூ125ம், ரூ30,001 முதல் ரூ45,000 வரை உள்ளவர்களுக்கு ரூ313ம், ரூ45,001 முதல் ரூ 60,000 வரை உள்ளவர்களுக்கு ரூ625ம், ரூ60,001 முதல் ரூ75,000 வரை உள்ளவர்களுக்கு ரூ938ம், ரூ75,001 முதல் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ1250 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பின்படி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தொழில்வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோரை போல ஆதரவளிக்கும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு


மாணவர்களை அவர்களின் பெற்றோருக்கு இணையாக ஆதரவளிக்கும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்குமென கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறை சார்பில் கற்றலில் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பயிலரங்கின் நிறைவு விழா நடைபெற்றது. துறைத்தலைவர் பேராசிரியர் கதிரவன் தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, பயிலரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது:
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள் வரை அணுக்கத்தன்மையற்ற ஆசிரியர்களின் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் நண்பராக, ஆலோசகராக மற்றும் அதற்கும் மேல் தங்களுடைய பெற்றோருக்கு இணையாக ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களை மிரட்டலாக அணுகாமல், கனிவாக பதில் தரும் ஆசிரியர்களால் கற்றலில் குறைபாட்டை மிக சுலபமாக கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த முடியும். இளைய தலைமுறையினரை சரியாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கு உள்ளது. 
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டுமே முக்கியமாக நினைக்காமல், வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து ஆதரவளிக்கும்போது, கற்றலில் குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிக் கட்டிடத்துக்கு கட்டாய வசூல்: தலைமை ஆசிரியை மீது புகார்

7 ஆம் வகுப்பு மாணவனின் டிசியில் கிரிமினல் என்று எழுதிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகே வினோபா பவே நகரில் உள்ள காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவன் மீது ஓழுங்கினமாக நடந்துகொண்டதாக கூறி சிறுவனின் பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரித்து டிசி கொடுக்க முடிவு செய்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த‘அச்சிறுவனின் பெற்றோர் இனிமேல் இதுபோன்ற தவறுநடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினரிடம்  கெஞ்சினர். எனினும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளதா தலைமை ஆசிரியை, உடனடியாக பள்ளி மாற்று சான்றிதழை (டி.சி.) தயாரித்தார்.

பள்ளியை விட்டு நீக்கியதோடு மட்டும் நின்று விடாமல், அந்த டி.சி.யின் ஓரமாக ‘இந்த பையன் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவன்’ என்ற குறிப்பையும் எழுதி கையொப்பமிட்டு தந்துள்ளார். இதனால், அவனை வேறு பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டனர்.

இந்த தகவல் ஒரு ஆங்கில நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில அரசின் பள்ளி கல்வி துறை உடனடியாக விசாரணை நடத்தி காஷ்மிர் வித்யா மந்திர் பள்ளியின் தலைமை ஆசிரியை நுட்டன் ஜன்கம் என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மாணவனை வாழ்க்கையை இருட்டாக்கிய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.

பள்ளி மாணவனின் வாழ்க்கையை தலைமை ஆசிரியர் ஒருவர் இருட்டாக்க முயன்ற சம்பவத்தில் பள்ளி நிர்வாகமும் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி: 5 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கையேடு

பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைப்பது தொடர்பாக 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இந்தக் கையேட்டை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் தயாரித்துள்ளது.
இந்தக் கையேட்டில், தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மையப்படுத்தி பல்வேறு குறிப்புகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சிரமப்படும் மாணவர்கள் தேர்ச்சி பெறவும், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் மண்டல வாரியாக அண்மையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் சிறப்பாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளைக் கொண்டு இந்தக் கையேட்டை தயாரிக்க அவர்கள் உத்தரவிட்டனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் சார்பில் மொத்தம் 50 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் முக்கியப் பகுதிகளும், அவற்றை நடத்த வேண்டிய முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைப்புப் பயிற்சி: ஒன்பதாம் வகுப்பில் பயிலும் 1.68 லட்சம் மாணவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இணைப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கற்பதில் சிரமப்படும் இந்த மாணவர்களை, பிற மாணவர்களுக்கு இணையாகத் தயார் செய்வதற்காக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கு வாசிப்புத் திறன், எழுதும் திறன், கணிதத் திறனில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகள் நவம்பர் இறுதியில் தொடங்கப்பட்டன. பிப்ரவரி மாதம் வரை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் உரிமைச் சட்டத்தில் புதிய விதி: குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவது கட்டாயம்

குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கி குழந்தைகள் உரிமைச் சட்டத்தில் புதிய விதியாக சேர்த்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 'மத்திய தேசிய கவுன்சில். முன்னதாக இச்சட்டம் ஒரு விவாதத்துக்குரியாதாக இருந்தது. ஆனால் தற்போது தாய்பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை எனபதை உறுதி செய்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாகியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்குகளை ஒப்படைக்க 10ம் தேதி கடைசி: திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் தகவல்


திருச்சி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியம் ஆண்டு வருமான உச்ச வரம்பை தாண்டியிருந்தால் வருமான வரி கணக்கு ஒப்படைக்க வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும்.  

திருச்சி மாவட்ட கரு வூல அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
ஓய்வூதியதாரர்களின் வயது 60க்குள் இருந்தால் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாகும். 60 வயதிற்குமேல் 80 வயதிற்குள் இருக்கும் ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்ச மும், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமும் இருக்க வேண் டும். 
இந்த வருமான உச்சவரம்புக்கு மேல் ஆண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண் (பேன் கார்டு நகல்) சேமிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிதியாண் டில் தங்களால் நேரடியாக வருமான வரி செலுத்தப்பட்டிருப்பின் அதன் விவரங்களை வருகிற 10ம் தேதிக் குள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலங்களில் அளிக்க வேண் டும். 
அவ்வாறு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் அளிக்காமல் தவறும்பட்சத்தில் தாங்கள் பெறும் ஓய்வூதியத் தின் அடிப்படையில் சேமிப்பு எதுவும் இல்லை யென கருதி வருமானவரி பிடித்தம் செய்யப்படும். மேலும் நிரந்தர கணக்கு எண் (பேன் நம்பர்) இல்லாதவர்களுக்கு நேரடியாக 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து கோரி தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டு இயக்கங்களின் பேரணிதிருச்சியில் நாளை நடக்கிறது


ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் நாளை தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பேரணி நடக்கி றது.
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியத்தை இடை நிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும். பங் கேற்பு ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல் வியில் தமிழ்வழி கல்விமுறையை தொடர வேண் டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள் ளது. அதன்படி திருச்சியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடக்கி றது. பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.


பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க பள்ளிக்கல்வித்துறை புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

மாணவர்களின் நாடித் துடிப்பை தெரிந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் வழியிலே சென்று மனப்பாடப்பகுதி பாடல்களை எளிதாக படிக்கவும் நினைவில் வைக்கவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மனப் பாடப்பகுதியில் சரியாக பதில் அளித்தால் முழு மதிப்பெண் பெற்று விடலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறுவது வழக்கம்.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்கும் வகையில் அந்த பாடல்கள் இனிய இசையில் ரசித்துக் கேட்கத் தூண்டும் ராகத்தில் ஆடியோ சி.டி.யாக உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) உதவியுடன் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் இந்த சி.டி.யை தயாரித்துள்ளது.
இசையில் அரசு பள்ளி இசை ஆசிரியர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த பாடல்களை பாடியுள்ளனர்.
34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆடியோ சி.டியை தயாரித்து ஆர்.எம்.எஸ்.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது.
இதில், தமிழ் பாடத்தில் திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், பெரியபுராணம், நாலாயிரத் திவ்யபிரபந்தம், சீறாப்புராணம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 14 மனப்பாடப்பகுதி பாடல் களும், அதேபோல், ஆங்கில பாடத்தில் 4 மனப்பாட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.