Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 4 August 2014

அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன்,
நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்

எளிமையான முறையில் ஆங்கிலத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய மையங்களைத் தொடங்கத் திட்டமிட்ட தமிழக அரசு, திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த மையத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 1000 சதுர அடியில் தொடங்கப்பட்ட இந்த மையத்துக்கான பணிகள் ரூ. 25 லட்சத்தில் 3 மாதங்களில் முடிக்கப்பட்டன.

என்னென்ன வசதிகள் : இந்த ஆய்வகத்தில் இணையதள வசதியுடன் ஓரே நேரத்தில் 30 மாணவர்கள் ஆங்கிலப் பயிற்சி பெறும் வகையில் கணினிகள் கொண்ட தனி அறை உள்ளது. இதேபோல 60 இருக்கைகள் கொண்ட மற்றொரு அறையில் எல்.சி.டி. புரஜக்டர் வசதி, பிரிண்டர்கள், நகலெடுக்கும் இயந்திரங்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

பயிற்சி யாருக்கு: அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஆங்கிலத்தில் அவர்கள் தடுமாற்றத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு சிறப்பாகப் கற்பிக்கும் வகையில் முதலில் ஆசிரியர்களுக்கும் பின்னர் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் முதலில் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வாரியாக தலா 2 ஆங்கில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சிக்குப் பின்னர் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பயிற்சி பெற அழைக்கப்படுவர் எனக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வருக்காகக் காத்திருப்பு: பணிகள் முடிந்து அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. காணொலிக் காட்சி வாயிலாக இந்த ஆய்வகத்தைத் திறக்க முதல்வர் தேதி வழங்கியவுடன் மையம் திறக்கப்பட்டு பயிற்சி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு

பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும். 

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

அனுமதி பெறாமல் இயங்கி வந்த 500 பள்ளிகள் மூட உத்தரவு: மீறி செயல்பட்டால் தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம்

தமிழகம் முழுவதும் கல்வித்துறை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 55 ஆயிரம் அரசு பள்ளிகளும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக், சுயநிதி, நர்சரி பள்ளிகள் செயல்படுகிறது. இது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தெருவுக்கு தெரு பிளே ஸ்கூல், நர்சரி என்ற பெயரில் உரிய அனுமதியில்லாமல் ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில் பின்பற்றவேண்டிய அடிப்படை விதிகளும் இங்கு மீறப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளை அவ்வப்போது கண்டறிந்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் தொடர்ந்து புற்றீசல் போல் பள்ளிகள் தொடங்குவது அதிகரிக்கிறது. நடப்பு கல்வியாண்டில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள், அனுமதியை புதுப்பிக்காத பள்ளிகளை கண்டறிந்து மூடுவதற்கு மாவட்டம் தோறும் தொடக்க கல்வித்துறை நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனுமதி இல்லாத பள்ளிகளை கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் மூடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டு மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் தொடர்ந்து செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து அவற்றுக்கு விதிமீறல் நோட்டீஸ் வழங்கி ரூ. ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கவேண்டும். அதோடு செயல்பட்ட நாட்களை கணக்கில் எடுத்து ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளி தாளாளர் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும். மேலும் மூடப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்கவும் அதிகாரிகள் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மூடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை 4ம் தேதி(நாளை) அறிக்கையாக தொடக்க கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 27 நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் கண்டறிந்து மூடுவதற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உஷா உத்தரவிட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் எருமபட்டி, பேளூக்குறிச்சி, திருச்செங்கோடு, வெண்ணந்தூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அங்கீகாரம் இன்றி இயங்கிய தலா ஒரு பள்ளிகள் வீதம் 5 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 9 நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகளை மூட இதுவரை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி அண்ட் பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைபள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ‘‘முதலில் தனியார் பள்ளிகள் செயல்பாட்டுக்கு தகுந்த விதிமுறைகளை வகுக்க வேண்டும். பள்ளிகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த தவறிவிட்டு, வேண்டுமென்றே கல்வித்துறை அதிகாரிகள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த சூழ்நிலை நிலவி வருகிறது. உடனடியாக இவ்விவகாரத்தில் அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும், என்றார். 

5ம் தேதி முதல்கள ஆய்வு

தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் சுமார் 500 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதுவரை மூடவில்லை. அங்கு படித்து வரும் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை இந்த வாரம் தொடங்குகிறது. இதற்கான கள ஆய்வு வரும் 5ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

சிவகங்கையில் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் 10 மாணவர் அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையிலான இளையான்குடி பகுதியிலுள்ள குறிச்சி, குக்குளம், பரத்திவயல், வாணியங்குடி, சுந்தரனேந்தல், இளமனூர் உள்பட 10 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் அழைத்து சிவகங்கையில் ஆலோசனை நடத்தினர். இதில், டி.இ.ஓ., ரவிக்குமார், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் பங்கேற்றனர்.

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடைநிற்றல் மாணவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டி.இ.ஓ., ரவிக்குமார் கூறுகையில், "முதல் கட்டமாக குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளி களில் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முடியாத பட்சத்தில் பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவுபடி, அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும்" என்றார்.

அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது.

உலக நாடுகளில், கணிதத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் சிங்கப்பூரில், சி.பி.ஏ., எனும் கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக் என்ற மூன்று முறைகளிலும், கணிதம் கற்பிக்கப்படுகிறது. நம் அரசு பள்ளிகளில், 'அப்ஸ்ட்ராக்' எனும் சுருக்கமாக தெரிவிக்கும் முறை மட்டுமே, அமலில் உள்ளது.தற்போது இப்புதிய முறையின் மூலம், மாணவர்களுக்கு கணிதம் எளிதாக புரியும் வகையில், கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி முகாம், சேலம் விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லுாரியில் தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இப்பயிற்சி குறித்து கணித ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போது பார்முலா வைத்து கணக்குக்கு தீர்வு காண்பது மட்டுமே, கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த பார்முலாவை வைத்து, அன்றாட வாழ்க்கையில், எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கும் போது, கண்ணில் பார்க்கும் காட்சியில் எல்லாம் கணிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் திறனை வளர்க்க முடியும்.அதே போல், 'மேத்ஸ் கிட்' எனும் கணித உபகரணங்களை கொண்டும், எவ்வாறு எளிதாக கணிதம் கற்பிக்கலாம் என்பதையும் இப்பயிற்சியில் கற்றுக்கொடுக்கின்றனர்.

மேலும் மாவட்டத்துக்கு, 10 பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுஉள்ளது. அதை கொண்டு, கணிதத்தை எளிதாக கற்றுக் கொடுக்கும் முறையும், இதில் கற்றுத்தரப்பட உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும், 'கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக்' ஆகிய முறைகளில் கணிதம் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.இதனால், கணிதம் என்றாலே, கசப்பு மருந்தாய் நினைக்கும், மாணவர்களின் நிலை நிச்சயம் மாற்றம் பெறும். என்.சி.இ.ஆர்.டி., வகுத்துள்ள விதிமுறைகளின் படி, கணிதப்பாடத்தை எளிதாக கற்பிக்கும் வகையில், இப்பயிற்சி அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை:

தலைமை ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.கல்வியில் பின் தங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்திட அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூரில், செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 
கலெக்டர் சுரேஷ்குமார், எம்.பி.,க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி முன்னிலை வகித்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க் கள் செல்வி ராமஜெயம், சிவசுப்ரமணியன், முருகுமாறன் கருத்துரை வழங்கினர்.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய அமைச்சர் சம்பத், கடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து, தேர்ச்சி குறைந்ததற்கான காரணத்தையும், அதனை நிவர்த்தி செய்திட மற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் சம்பத் பேசியதாவது: கல்வியால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதனை உணர்ந்தே முதல்வர், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.ஆனால், பழமையான நமது மாவட்டத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது.தலைமை ஆசிரியர்கள், நீங்கள் மனது வைத்தால் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்க முடியும். நீங்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டால், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும்.வரும் பொதுத் தேர்வில், நமது மாவட்டம், மாநில அளவில் 10 முதல் 15 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சீரமைத்து, பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தேர்ச்சி சதவீதம் குறைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

நடப்பு கல்வியாண்டில்: 

தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில்,ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. 'அரசுபள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டு வருவது போல், அரசு உதவி பெறும் பள்ளியிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், 'அரசு தரப்பில், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது' என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள்,அதிருப்தியில் உள்ளனர்.14 லட்சம் மாணவர்கள்: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 5,071தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.அரசு பள்ளியை போலவே, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி தேவை என, அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.கடந்த, 1990 - -91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது.தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. 

மேலும், அரசு பள்ளிகளே தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஏக்கம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட பொருளாளர் ராமராசு கூறியதாவது:அரசு பள்ளிகளை போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குழந்தைகள், தங்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு கிடைக்குமா என, ஏங்கி உள்ளனர். அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துவருகிறது.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளதால், மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.--தினமலர்

அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.

மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி, தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனையடுத்து, அதில் பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜுலை 30ம் தேதி, தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவது முடிவுகள் வெளியாகும், எப்படியாவது, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், TRB இணையதளத்தின் முன், தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொறுமையின் எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள்.

ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறு செய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 11,226 பேர் உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்து, மொத்தம் 15,226 பேருக்கான இறுதி பட்டியல், ஆகஸ்ட் 1ம் தேதி காலையோ அல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்" என்பதுதான் அந்த செய்தி.

அவற்றைப் படித்த தேர்வர்கள், மீண்டும் மகிழ்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். ஆனால், அன்றும், முழுநாள் தவம் கிடந்ததுதான் மிச்சம். முடிவுகள் வெளியாகவில்லை. டி.ஆர்.பி. என்னதான் சொல்ல வருகிறது? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது...

தேர்வர்கள் சிலர் கூறியதாவது: பி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன், அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள் எல்லாம் உள்ளனர். இவர்களில், சாதி ஒதுக்கீடு, கலப்புத் திருமணம், ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TET தேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாக, பிராந்திய மற்றும் DPI அளவில் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறு முன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்காதா? என மிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளனர்.

புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை?

கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்கு பெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லை. கடந்த 2012ம் ஆண்டு, அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TET தேர்வையெழுதி, எந்தவித அனுபவமோ, அறிமுகமோ இல்லாமல், தகுதியான ஆசிரியர்கள் என்ற போர்வையில், உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.

மேலும், 2013ம் ஆண்டிலும், உடனடியாக TET தேர்வை நடத்தாமல், புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும் தேர்வையெழுத வேண்டும் என்று, பல்லாண்டுகளாக பி.எட்., முடித்து காத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆகஸ்ட் மாதம் தேர்வை நடத்தியது டி.ஆர்.பி. இதனால், அந்த கல்வியாண்டில், வேறு மேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம் என்று நினைத்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்தது.

எனவே, அனைத்துவித தகுதிகளையும், ஏன், தேவைக்கும் அதிகமான தகுதிகளைப் பெற்றிருந்தும், பல்லாண்டுகளாக அரசுப் பணிகளுக்கு ஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்து, இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தேவையின்றி, எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் என அவர்கள் ஆவேசமாய் தெரிவித்தனர்.

TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்

பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணிபுரிகின்றனர்.

பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆகஸ்ட் 4ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல்; தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' கல்வித்துறை எச்சரிக்கை

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கவுன்சிலிங்:
பள்ளி கல்வித்துறை சார்பில், 10 'மொபைல் கவுன்சிலிங்' வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில், ஒரு வாகனத்திற்கு ஒருவர் வீதம், 10 உளவியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இவர்கள், மாவட்ட வாரியாக, பள்ளிகளுக்கு சென்று, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், 'கவுன்சிலிங்' அளித்து வருகின்றனர். சில
மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த, பள்ளி முதல்வர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், 'மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பள்ளிகளில், முக்கிய இடங்களில்,
'கேமரா' பொருத்த வேண்டும்' என, பள்ளி முதல்வர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் தர...:
பெரிய தனியார் பள்ளி களில் மட்டும், கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஆனால், இரண்டாம் தர, கடைநிலையில் உள்ள தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்தவில்லை. அரசு பள்ளிகளில், கேமராக்களை பொருத்த, இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருட்டு:
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும், இரவு நேர காவலர்கள் கிடையாது. இதனால், பல இடங்களில், 'லேப் - டாப்'களும், கம்ப்யூட்டர்களும் திருடு போகின்றன. இந் நிலையில், கேமராக்களை எங்கே பொருத்துவது?கேமராக்களை பொருத்துவது குறித்து,எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலை மதிப்புமிக்க கேமராக்களை பொருத்தினால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.'மொபைல் கவுன்சிலிங்' திட்டம், இன்னும் முழுமையாக, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்றடையவில்லை. 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து, 10 வாகனங்கள் என்பது மிகவும் குறைவு.மொத்தம் உள்ள, 56,828 பள்ளிகளில், 45,366 பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்.இவ்வளவு பள்ளிகளுக்கு, 10 வாகனங்கள், கண்டிப்பாக போதாது. குறைந்தது, மாவட்டத்திற்கு ஒரு, 'மொபைல் கவுன்சிலிங்' வாகனம் வேண்டும். அப்போது தான், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்; ஆசிரியர்களுக்கும்,

உரிய உளவியல் கலந்தாய்வை அளிக்க முடியும்.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை:
இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஆசிரியருக்கு தண்டனை வழங்கும் அரசாணையை சுட்டிக்காட்டி, கல்வித்துறை, மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'பாலியல் புகாரில் சிக்கினால், பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும், உரிய துறைகளின் மூலம் ரத்து செய்யப்படும்' என்றும், கல்வித்துறை எச்சரித்துள்ளது.ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில், சத்யபிரபு என்ற, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர், பாலியல் புகார் காரணமாக, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

87 லட்சம் மாணவர்களில்: 1.66 லட்சம் பேருக்கு கவுன்சிலிங்அரசு பள்ளிகளில், 56.55 லட்சம் மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 31.12 லட்சம் மாணவர்களும் படித்து வருகின்றனர். 87 லட்சம் மாணவர்களில், இதுவரை, 1.66 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, கவுன்சிலிங்அளிக்கப்பட்டுள்ளன.

இந்த புள்ளி விவரங்களை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை விவரம்:இதுவரை, 802 பள்ளிகளை பார்வையிட்டு, 74,263 மாணவர்களுக்கும், 91,898 மாணவியருக்கும் என, 1,66,161 பேருக்கு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 7,101 பேருக்கு, சிறப்பு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
87 லட்சம் மாணவர்களுக்கும், விரைந்து கவுன்சிலிங் அளிக்கும் வகையில், மொபைல் கவுன்சிலிங் வாகனங்களையும், உளவியல் நிபுணர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.தேர்வாளர்கள் குமுறல்