தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.நெல்லையில் மூத்த வக்கீல்கள் திருவுருவ படத்திறப்பு விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: "டி.என்.பி.எஸ்.சி., நடத்திய டி.எஸ்.பி., துணை கலெக்டர், மாவட்ட பதிவாளர் போன்ற 25 பணியிடங்களுக்கான குரூப்1 தேர்விற்கு ஆயிரத்து 372 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 84 சதவீதம் தேர்வு எழுதினர். குரூப்1 தேர்வு சிறந்த முறையில் நடந்தது.விடைத்தாள்கள் நேர்மையான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு 3 மாத காலத்திற்குள் முடிவு வெளியிடப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படவுள்ளனர்.கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும்" இவ்வாறு என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment