Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 28 October 2013

திருச்சி மாநகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைப்பு

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை, மதுரை
புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், ஜங்சன் வழியாக காதிகிராப்ட் கிழக்குபுறத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு விராலிமலை ஜங்சன், மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து வரும் பஸ்கள் விராலிமலை ஜங்ஷன், அரிஸ்டோ ரவுண்டானா, கோரிமேடு வழியாக பெரியமிளகுபாறையில் (கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி அருகில்) உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு பெரியமிளகுபாறை, கோரிமேடு, அரிஸ்டோ ரவுண்டானா, விராலிமலை ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
கோவை, சென்னை
கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதியில் இருந்து வரும் பஸ்கள் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு திரும்ப செல்ல வேண்டும்.
சென்னை, சேலம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் வில்லியம்ஸ் சாலை, முத்தரையர் சிலை, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல், பழனி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் காவல் சோதனை சாவடி-1, கருமண்டபம், கோரிமேடு, வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் ராஜாஜி சாலை பெரியமிளகுபாறை, கோரிமேடு, கருமண்டபம், காவல் சோதனை சாவடி-1 வழியாக செல்ல வேண்டும்.
மாநகர பஸ்கள்
வ.உ.சி. சாலையில் மத்திய பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு அடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோஷன் மகால் வழியாக சங்கம் ஓட்டல் சாலையை அடைந்து, வெஸ்ட்ரி பள்ளி வழியாக செல்ல வேண்டும். மற்ற ஆம்னி பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப மட்டும் ஆம்னி பஸ்கள் வ.உ.சி. சாலைக்கு செல்ல வேண்டும்.
மாநகர பஸ்கள் அனைத்தும் வழக்கமாக செல்லும் வழித்தடங்களில் சென்று வர வேண்டும். அரசு பஸ்கள் இயக்கப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தங்களுக்கு உண்டான பணிமனைகளில் நிறுத்தி வைக்க வேண்டும். மற்ற கோட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொண்டு தேவையான நேரத்திற்கு மட்டுமே மத்திய பஸ் நிலையத்திற்குள் வர வேண்டும். மத்திய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் எந்த பஸ்சையும் நிறுத்தி வைக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment