காஞ்சிபுரம் அருகே பசுமையான கிராமம் விஷார். இக்கிராம மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தேயே நம்பியுள்ளனர். இங்குள்ள தாமரைகுளம் அருகில் பீமமேஸ்வரர் கோயில் உள்ளது. இதனருகில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதில் 1000த்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன. இவைகள் இரவில் பலஇடங்களில் இரைதேடிவிட்டு இந்த மரத்துக்கு வந்துவிடும். வவ்வால்களுக்கு இடையூறு செய்யாத வகையில் இக்கிராம மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிப்பதில்லை. மத்தாப்பூ போன்ற சத்தம் வராத வெடிகளையே வெடிக்கின்றனர். இந்த வழக்கத்தை 150 ஆண்டாக கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் நாகேந்திரன், பிரசாந்த்திடம் கேட்டபோது, ‘குழந்தை பருவத்தில் இருந்தே மரத்தில் இருக்கும் வவ்வால்களை பார்த்து வருகிறோம். விளையாட்டுக்குகூட வவ்வால்கள் மீது கற்களை எடுத்து எறிவதில்லை’ என்றனர். முருகன், சண்முகம் கூறுகையில், ‘இந்த ஆலமரம் 200 ஆண்டுக்கும் மேலாக இருப்பதாக கூறுகின்றனர். 3 மரங்களில் 2 மரங்கள் விழுந்துவிட்டன. தற்போது இந்த மரம் மட்டும்தான் உள்ளது. வவ்வால்களுக்காக அதிக சத்தம் உள்ள பட்டாசு வெடிக்காத வழக்கத்தை பல ஆண்டாக கடைபிடித்து வருகிறோம்’ என்றனர்.
No comments:
Post a Comment