Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 27 October 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.10.2013 தேதி அன்று நடைபெற்ற மாநில செயற்குழு அறிக்கை

 
சி. பிரபா, மாநில பொதுக்குழு  உறுப்பினர், நாகை.

26.10.2013 - மாநில செயற்குழு - முதல் நாள் 

மாநிலத் தலைவர் திரு. கோ. காமராஜ் அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு கூடியது. செயற்குழுவில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரே பொருள் - அடுத்தக் கட்டப் போராட்டம்.

பொதுச் செயலாளர் திரு. ரங்கராஜன் அவர்கள் பேரியக்கத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சகோதர இயக்கங்களிடமிருந்து வந்திருந்த கடிதங்கள் மற்றும் மூத்த பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய செ.முத்துசாமி உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகள் முதலானவற்றை விளக்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அடுத்தக் கட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காணப்பட்ட அழைப்புகளுக்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்கத்தின் உயிர் நாடிகளான மாவட்டச் செயலாளர்களின் கருத்துருக்கள் கோரப்பட்டன. உடல்கள் மட்டுமே வேறு உயிர் ஒன்று தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வகையில் அனைவரும் அடுத்தக்கட்ட போராட்டம், இறுதி வெற்றி பெரும் போராட்டமாக இருக்க வேண்டும்...அதுவும் அசரடிக்கிற அதிரடியாக அமையவேண்டும்.. அது அனைத்து ஆசிரிய சகோதரர்களின் ஒன்றுபட்ட போராட்டமாக அமைய வேண்டும், பள்ளிகளை மூடி அரசின் கதவுகளை திறக்க செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மாபெரும் பேரியக்கத் தேரின் மிகப்பெரிய சக்கரங்களான மாவட்டச் செயலாளர்கள் இயக்க அச்சாணிகளான ஆசிரியர்களின் உணர்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தி அதை வெற்றிகரமாக்கிட கொண்டுள்ள உணர்வுகளைக் கண்டு பூரிப்படைகிறோம்.
சகோதரர்களுடன் இணைந்த போராட்டம், இறுதி வெற்றிப் போராட்டம் என்ற ஒருமனதான முடிவை ஏற்றுக் கொண்ட மாநில செயற்குழு அடுத்தக் கட்ட போராட்டத்தை வடிவமைத்திடவும் உயிர் கொடுத்திடவும் சகோதர இயக்கங்களுடன் அமர்ந்து பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில பொறுப்பாளர்களுக்கு முழு அதிகாரங்களை வழங்கி செயலாற்றியது. 
காத்திருக்கிறோம் களமிறங்க...
வென்றிடுவோம் ஒன்றிணைந்து....

No comments:

Post a Comment