Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 15 November 2013

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில், தபால் பட்டுவாடா செய்யும் பணியில், சில ஆசிரியர்கள் உலாவுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்

தமிழக அரசுபள்ளிக் கல்வித்துறை சார்பில்ஏழைஎளிய மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மாணவர்கள் இடைநிற்றல்குழந்தை தொழிலாளர் மீட்டல்இடம்பெயர்தல் தடுத்தல் ஆகியவற்றை கண்டறிந்து,
அவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகள் ஏற்படுத்துகிறது.
மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தந்தாலும்,ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லையென்றால்தேர்ச்சி என்பது இல்லாத ஒன்றாகிவிடும். அதற்காககடந்த சில ஆண்டுகளாக,காலியான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்குபோக்குவரத்து சிரமங்களை குறைக்கதாங்கள் விரும்பிய இடத்தில் பணியாற்றஆண்டு தோறும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இருந்தும்சில ஆசிரியர்கள்விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில ஆசிரியர்கள்தங்களது தினசரி வகுப்புகள் முடிந்தவுடன்,தனியார் பள்ளி மாணவர்களுக்குடியூஷன் எடுத்தல்விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால்அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் கல்வி போதிக்க முடியாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில்நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅரசு துவக்கப்பள்ளிநடுநிலைப் பள்ளிஉயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளிகளுக்குமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மாவட்ட கல்வி அலுவலர்அனைவருக்கும் கல்வி சி.இ.ஓ.,மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் அலுவலகத்தில் இருந்து,அரசின் நலத்திட்ட செயல்பாடுகள்அலுவல் பணிகள்தேர்வு பணி,மாணவர் மற்றும் ஆசிரியர் விவரங்கள்தபால் மூலமாக கேட்கப்படும்.
அந்தகடிதங்களைசம்பந்தப்பட்ட பள்ளியின் அலுவலக உதவியாளர்இளநிலை உதவியாளர் மூலமாகபள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்படும். அவர்உரிய விவரங்களை சேகரித்துமீண்டும்உதவியாளர் மூலமாகமாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்.
ஆனால்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில்ஆசிரியர்கள் சிலர்தங்களது பள்ளி தொடர்பான கடிதங்களை சமர்பித்து வருகின்றனர். அவர்கள்நாமக்கல்லில் இருந்துபல்வேறு பள்ளிக்கு செல்வதால்,தினசரி தபால் பட்டுவாடா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தபால் பட்டுவாடா செய்யும் ஆசிரியருக்குபள்ளி வர வேண்டிய நேரத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும்சம்பந்தப்பட்ட தபால் பட்டுவாடா ஆசிரியர்கள்காலை, 10 மணிக்கு சி.ஓ.ஓ.,மற்றும் டி.இ.ஓ.அலுவலகத்தில் தபாலை கொடுத்துவிட்டுமதியம் தான் பள்ளிக்கு செல்கின்றனர்.
ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டுதபால் பட்டுவாடா பணிகளை செய்வதால்மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் வகுப்புக்கு செல்லாததால்,மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

எனவே, "சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டுபள்ளி ஆசிரியர்களைஅலுவலக தபால்களை பட்டுவாடா செய்ய பயன்படுத்தக் கூடாதுஎனமற்ற ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment