கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி.என். பி.எஸ்.சி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை பகுதிகளில் முன்கூட்டியே வெளியானது. இதையடுத்து குரூப் 2 தேர்வை தமிழ்நாடு தேர்வாணையக்குழு ரத்து செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய பவானியை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி தனபாக்கியம் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
இதில் நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் சுதாகர், பிரவுசிங் சென்டர் நடத்தி வந்த நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்ராஜ், திருவண்ணா மலையில் வசித்த ஸ்ரீதர்ராஜின் தம்பி செந்தில்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தராவ் ஆகியோரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதில், நாகை மாவட்டத்தில் வணிகவரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார், இவரது சகோதரர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 32 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சென்னை வணிக வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஞானசேகரன்(31) என்பவரை கோவை சிபிசிஐடி போலீசார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 42 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment