மாணவி தற்கொலை முயற்சிக்கு, காரணமாக இருந்ததாக, நான்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த லலிதா மகள் பாரதி, 17; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 7ம் தேதி, பள்ளி இரண்டாவது மாடியிலிருந்து, குதித்து தற்கொலைக்கு முயன்றார். சேலம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் தனமணி ஆகியோர், நேரில் சென்று, பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இயற்பியல் ஆசிரியர் பழனியப்பன், கணினி ஆசிரியர் தமிழ்ச்செல்வம், வேதியியல் ஆசிரியர்கள் சரஸ்வதி, கலைவாணி ஆகியோர் நடத்திய சூடியூசனில்', பாரதி படித்தது தெரிய வந்தது. டியூஷன் கட்டணம் வழங்க தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பாரதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது. விசாரணை அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியர்கள், நான்கு பேர், மற்றும் அவர்களைக் கண்டிக்க தவறிய, தலைமை ஆசிரியர் சசி ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment