Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 10 January 2014

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்க கோரிக்கை


அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும், 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர், தங்களுக்கும், பொங்கல் போனசாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தினக்கூலி அடிப்படையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுபவர், ஒப்பந்த பணியாளர், ஒப்பந்தம் அடிப்படையிலான தற்காலிக உதவியாளர், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர், பகுதிநேர பணியாளர் உள்ளிட்டோருக்கு, 1,000 ரூபாய், போனசாக வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வரும், 16 ஆயிரம் ஆசிரியர்களும், 1,000 ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தலைமை ஆசிரியரிடம் கேட்டால், தகவல் எதுவும் வரவில்லை என, தெரிவிக்கிறார். மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, எங்களுக்கு 
சம்பளம் வழங்கப்படுகிறது. போனஸ் கிடைக்குமா, கிடைக்காதா என, ஒன்றும் தெரியவில்லை. 
குறைந்தபட்ச போனசாக, 1,000 ரூபாயை, எங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.


16 ஆயிரம் பேர் : அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டாரம் கூறுகையில், பகுதி நேரத்தின் அடிப்படையில், 16 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். அரசு குறிப்பிடும், பகுதிநேர ஊழியரில், இவர்கள் வர மாட்டர். எனவே, இவர்களுக்கு, போனஸ் கிடையாது என, தெரிவித்தன. ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியர் என, 16 ஆயிரம் பேர், பகுதிநேர அடிப்படையில், இரு ஆண்டுகளாக, பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, தொகுப்பூதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment