Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 9 January 2014

அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சிக்கு ஆய்வுக்கூடம்: திருச்சியில் அமைப்பு


தமிழகத்திலேயே முதன்முறையாக, ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம், திருச்சி அரசுப்பள்ளியில் அமைகிறது.
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில கற்றலை எளிமை படுத்துவதற்காக, தமிழக அரசு ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலேயே முதன்முறையாக, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூட்டத்துக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், 30 கம்ப்யூட்டர், ஆடியோ சிஸ்டம், சாஃப்ட்வேர், சேர், பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவு பெற்றதும், முதலில் சோமரசம்பேட்டை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பிறகு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்ளை ஆய்வு கூடத்துக்கு அழைத்து வந்து பயிற்றுவிப்பார்கள். மாவட்டத்தில் உள்ள இதர பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், பின் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஆய்வுக்கூட ஏற்பாடுகளை இடைநிலை கல்வித்துறை இணை இயக்குனர் முத்துகுமாரசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். 
திருச்சியை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், இரண்டாயிரம் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்சி ஆய்வு கூடம் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment