Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 21 January 2014

பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ

சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி அட்டைகள்(admit card), ஜனவரி 27ம் தேதி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க, CBSE, தனது இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும், தேர்வெழுதுவோரின் பட்டியலுக்காக, விபரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Roll Numbers -உடன், அனைத்து தேர்வர்களுக்குமான பட்டியல் மற்றும் அனுமதி அட்டைகளை, பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Print செய்யப்பட்ட அனுமதி அட்டைகள், CBSE வாரியத்தால் தனியாக அனுப்பப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய, ஆன்லைன் சமர்ப்பித்தலின்போது பயன்படுத்திய user ID மற்றும் Password -ஐ உபயோகித்து, தேர்வர் பட்டியல் மற்றும் அனுமதி அட்டைகளை வாரியப் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment