Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 16 January 2014

பொங்கல் விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு : தனியார் பள்ளிகளால் பெற்றோர் அதிர்ச்சி


 பொங்கல் விடுமுறையிலும், பல பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தமிழரின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் விழாவுக்கு, ஜனவரி, 14, 15 மற்றும் 16 ஆகிய, மூன்று நாட்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி, 13ம் தேதியும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் மற்றும் நிதியுதவி பள்ளிகளில் பெரும்பாலானவை, 10ம் வகுப்பு மற்றும், பிளஸ்2 மாணவர்களுக்கு, பொங்கல் பண்டிகையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தின. இதனால், பொங்கல் பண்டிகையின் போது, சொந்த ஊருக்கு கூட செல்ல முடியாத நிலையில், பெற்றோரும், மாணவர்களும் அவதிக்கு உள்ளாகின்றனர். 
இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது: சுயநிதி மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலானவை, தேர்ச்சி விகிதத்தில் மட்டுமே முழுக் கவனத்தை செலுத்தி வருகின்றன. இதனால், அரசு விடுமுறை தினங்களில் கூட, சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. "சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு மதிப்பெண் குறைக்கப்படும்' என, மிரட்டப்படுவதால், மாணவர்கள், பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. 
பண்டிகை தினங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment