Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 30 January 2014

ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு தமிழக அரசு அறிவிப்பு

ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 ஆயிரம் குழந்தைகள்
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மையங்கள் 32, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மையங்கள் 32, பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான மையங்கள் 15, மூளைமுடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மையம், திருச்சியில் ஒரு மையம், சென்னையிலுள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 5 ஆரம்பநிலைப்பயிற்சி மையங்கள் மற்றும் திருச்சியில் உள்ள மண்டல வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 2 மையங்கள் என ஆக மொத்தம் 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 3,67 குழந்தைகள் பயில்கின்றனர்.
இணை உணவும், மதிய உணவும்
3.2.14 முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களிலிருந்து, இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
இந்த மையங்களில், பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவுடன் இருப்பதால், இந்த குழந்தைகள் அனைவருக்கும் கீழ்கண்டவாறு உணவு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முட்டை, சுண்டல்
*6 மாதம் முதல் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்: 190 கிராம் எடையுள்ள இணை உணவு வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் வாரம் ஒருமுறை வழங்கப்படும்.
*ஒரு வயதிலிருந்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்: 190 கிராம் எடையுள்ள இணை உணவு வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் வாரம் ஒரு முறையும், மதிய உணவுடன் வாரம் மூன்று நாட்கள் முட்டையும், மற்றும் 2 நாட்களுக்கு சுண்டலும் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக, அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 3.2.14 முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், இத்திட்டத்தினை 29–ந்தேதியன்று (நேற்று) மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில், சென்னையில் செயல்படும், 5 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் 125 குழந்தைகளுக்கு, மதிய உணவு மற்றும் இணை உணவு வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ப.சிவசங்கரன், மாநில ஆணையர் க.மணிவாசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment