Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 30 January 2014

சிறுநீர் குடித்து உடல் நலம் பேணும் யோகா ஆசிரியர்

யோகா ஆசிரியர் ஒருவர் யோகாவோடு சிறுநீர் குடித்து உடல் நலம் காத்து வருகிறார்.
தேனியை சேர்ந்தவர் முருகானந்தம். அரசு மருத்துவமனையில் நலக்கல்வியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 25 வயதில் இருந்து யோகாசனம் செய்து வருகிறார். பயிற்சி முடித்து கடந்த 20 ஆண்டுகளாக யோகாசனம் கற்றுத் தருகிறார். இவரது மனைவி சித்த மருத்துவர் விஜயலட்சுமி. தற்போது 65 வயதான முருகானந்தம் இரவு 9 மணிக்குள் வேலைகளை முடித்து இரவு படுக்கைக்கு செல்கிறார்.
அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து இரண்டு மணி நேரம் யோகசனம் செய்கிறார். அதன்பின் பிறருக்கு யோகாசனம் கற்றுத் தருகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு மாலை தியானமும் பயிற்சியும் சொல்லித் தருகிறார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கிறார். வெண்டை, கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வருகிறார்.
மேலும் பல, ஆண்டுகளாக தன்னுடைய சிறுநீரை பிடித்து குடித்து வருகிறார். சிறுநீரை பிடித்து சேகரித்து வைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளிக்கிறார். இது குறித்து கேட்டால் சிறுநீர் "தெரபி" என்று கூறுகிறார்.
முருகானந்தம் சொல்வதை கேட்போம். சித்தர்கள் நமக்கு வழங்கியது சிறுநீர் மருத்துவம். இது குறித்து போகர் சித்தர் பாடல் வரியில், "செய்யவே பதினெட்டுக் குட்டம் சூலை, தீரவே சிறுநீரில் கட்சங் கேளு, பையவே பேய்த்தேற்றான ஒன்று செய்து வைத்துக் கொண்டு, நையவே காலைதனில் எழுந்திருந்து நன்மையுடன் சிறுநீரில் ஒரு சேர் வாங்கி.." என்று செல்கிறது.
அதுபோல், "அரவக்கடி யகலவங்கு சிறுநீர் சிரங்கை, பரவக்குடி விஷம்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் பாம்பு கடித்தவுடன் சிறுநீர் பிடித்து குடித்துவிட்டால் விஷம் குறைந்து விடும் என சொல்லப்பட்டுள்ளது. பல தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. சித்தர் பாடல்களில் சிறுநீர் "அமுரி, தேகந்தண்ணீர், சந்திர புஷ்கரணி" போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சிறுநீரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் தீரும். முடி கருக்கும். உலகத்தில் முதல் மருந்து சிறுநீர், இதை உணர்ந்து உண்ண அகலில் உள்ள தீபம் போல் வாழ்வு ஒளிரும். இது போன்று பல பாடல்கள் கூறப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் மேய்ந்து வரும் ஆடு, மாடுகளின் சிறுநீரை பிடித்து சேகரித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக மிளகில் கலந்து வெயிலில் பக்குவமாக தொடர்ந்து காய வைத்து, அதை பொடி செய்து மாத்திரையாக மாற்றியும் அருந்தலாம். இந்த சிறுநீர் மருந்தால் பல தீர்க்கப்படாத வியாதிகள் தீர்க்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை "சிறுநீர் தெரபி" எடுத்து வருகின்றனர். முக்கியமான விஷயம் அவர் அசைவ உணவு உண்பது, மது பழக்கம் உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டிருக்க கூடாது, என்றார்.
இது குறித்து, தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சங்கர் கூறுகையில், "சித்த மருத்துவத்தில் "அமுரி" குறித்து பல கருத்துகள் உள்ளது. இது தான் என்று அறுதியிட்டு கூற முடியவில்லை. இது குறித்து ஆராய்ச்சியும் விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
தேனி சிறு நீரகவியல் மருத்துவர் அபிமன் கவுதம் கூறுகையில், "அலோபதி மருத்துவமுறையில் இது குறித்து எந்தவித தகவலும் இல்லை. இணையதளங்களில் இதுகுறித்து செய்திகள் உலா வருகிறது. இது குறித்து கூறுபவர்கள் தான் இதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment