Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 9 January 2014

மதிப்பெண் சான்று இல்லையா? சீக்கிரமா சொல்லுங்க!

 ''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன. சம்பந்தபட்ட தேர்வர், உடனடியாக, மதிப்பெண் சான்றிழை பெற வேண்டும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு: மேற்கண்ட ஆண்டுகளில், பிளஸ் 2 தனிதேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய பழைய மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை பெற, இதுவரை, சம்பந்தபட்ட தேர்வர் முன் வரவில்லை. இதனால், அந்த சான்றிதழ்களை அழித்திட, திட்டமிடப்பட்டு உள்ளது. எனினும், தனி தேர்வர் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள், மதிப்பெண் சான்றிதழை பெற வசதியாக, இந்த தேதியில் இருந்து, மூன்று மாதம், கால அவகாசம் தரப்படும். அதன்பின், சம்பந்தபட்ட மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் பெற விரும்பும் தேர்வர், 'அரசு தேர்வு இயக்குனரின் கூடுதல் செயலர் (மேல்நிலை), எச் - 9 பிரிவு, அரசு தேர்வு இயக்குனரகம், சென்னை - 6' என்ற முகவரிக்கு, தேர்வெழுதிய ஆண்டு, மாதம், பதிவு எண், மையம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். அத்துடன், 40 ரூபாய், 'ஸ்டாம்ப்' ஒட்டி, சுய முகவரியிட்ட கவரையும், விண்ணப்பத்தில் இணைத்து, மதிப்பெண் சான்றிதழை பெறலாம். வரும் ஆண்டுகளில், மதிப்பெண் சான்றிதழ்களை, இரு ஆண்டு வரை மட்டும், தேர்வுத்துறை பாதுகாக்கும். அதன்பின், சான்றிதழ்களை அழித்து விடும். இவ்வாறு, தேவராஜன் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment