Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 15 January 2014

மாநகராட்சி பள்ளிகளின் அவலநிலை: மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் அவலநிலையை கண்டித்து புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 இது குறித்த விவரம்:
 புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டடத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். அவர்கள் பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என்றுக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு தடுக்க ஏராளமான போலீஸார் ரிப்பன் கட்டட வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மணலி அருகே பள்ளிக் கூரை இடிந்து 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை, மேயர் நேரில் சந்தித்ததையடுத்து, கலைந்துச் சென்றனர்.
 இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று, அங்கு குறைவாக உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் மனு அளித்திருந்தனர். இருப்பினும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில் மணலி புதுநகர் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து இரு மாணவர்கள் அண்மையில் காயமடைந்துள்ளனர்.
மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 இதனையடுத்து மேயர் எங்களை அழைத்து பேசினார். அப்போது, புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி அமைப்பினர், மாநகராட்சி கல்வி அதிகாரிகளுடன் சேர்ந்து வரும் 17-ஆம் தேதி மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு நடத்தலாம் என்றும் அது குறித்து விவரங்களை தன்னிடம் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment