Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 20 January 2014

அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை

அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் கூட்டமைப்பின் செயலர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் கூறியுள்ளபடி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.5,700-ம், தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.4,800-ம் மாத ஊதியமாக வழங்க வேண்டும்.
இந்தத் துறையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற துறைகளைப் போலவே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் பழனிச்சாமி.
நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தமிழரசன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் அன்பரசு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment