Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 21 January 2014

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நாமக்கல்லில், நேற்று துவங்கியது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றோர் விபரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமையில் துவங்கிய இப்பணி, ஏழு குழுக்காளாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
அதில், டி.இ.ஓ., பன்னீர்செல்வம், ஐந்து, பள்ளித் தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள், 262 பேர், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள், 861 பேர் என, மொத்தம், 1,123 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாளில், 169 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
இப்பணியை, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இடைநிலை முற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் சான்றிதழ் சரி பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment