Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 19 January 2014

சென்னையில் இன்று சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது.  தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஊதியம் வழங்கி, பணி  விதிமுறைகள் உருவாக்கி முழு நேர பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி பணியாளர்,  ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும்  அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். ஆண் வாரிசு, கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை தளர்த்தி, வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்காமல், பல ஆண்டு காலமாக  உள்ள தேக்க நிலையை மாற்றி உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

No comments:

Post a Comment