Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 25 February 2014

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்பு?


பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள்களை 10 நாட்களில் திருத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. மார்ச் இறுதியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  விடைத்தாள்களை திருத்துவதற்காக, 32 மாவட்டங்களில் 66 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 36 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு மறுகூட்டல் நடத்தப்பட்டபோது ஏற்பட்ட குளறுபடிகளை தவிர்க்க, அந்தந்த பாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதிகபட்சம் 10 நாட்களில் முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளும் விரைவாக வெளியாக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment