Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 2 August 2014

குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவி!


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசுத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளியாகப் பணியாற்றிய பாக்கியலட்சுமி, மீட்கப்பட்ட பின்னர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாதனை படைத்ததோடு பொறியியல் இசிஇ படிப்பிலும் இப்போது சேர்ந்திருக்கிறார்.

இவரைப்போல் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 20-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 11,000 பேர் தமிழகம் முழுவதும் உள்ள 330 பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களில் 390 பேர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 370 பேர் தேர்ச்சியும் பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 27 பேர் 1,200-க்கு 1,000-க்கு மேல் மதிப்பெண் பெற்றும், 66 பேர் 900-க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.

இவர்களில் அதிகபட்சமாக 1,144 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, கைத்தறித் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட, பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த கோபால், பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்பில் சேர்ந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 1,092 மதிப்பெண்கள் பெற்ற சிவகாசியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் பி.இ. இசிஇ படிப்பில் சேர்ந்துள்ளார். இவர் பட்டாசுத் தயாரிப்புத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டவர்.

இதுபோல் பட்டாசுத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட சிவகாசியைச் சேர்ந்த சரவணன் (1017), வீரபாப்ராஜ் (985) ஆகியோர் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்துள்ளனர். இதே கல்லூரியில் காளீஸ்வரி (1011) என்ற மாணவி இசிஇ பிரிவில் சேர்ந்துள்ளார்.

இவர்களைப் போல் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்ட 4 குழந்தைத் தொழிலாளிகள், கிருஷ்ணகிரியிலிருந்து 3 பேர் என தமிழகம் முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வு முடிய சனிக்கிழமையோடு சேர்த்து இன்னும் 3 நாள்கள் உள்ளதால், மேலும் சிலர் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயர் கல்வியில் சேர்ந்துள்ள குழந்தைத் தொழிலாளிகளில் சிலருக்கு கல்விக் கட்டணத்துக்கான உதவிகள் கிடைத்துள்ளபோதும், பலருக்கு உதவிகள் கிடைக்கவில்லை. சிலர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றபோதும், பொருளாதார வசதி இல்லாததால் உயர் கல்வியில் சேர்வதையே தவிர்த்து வருவதாகவும் தேசியக் குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பப் பொருளாதாரச் சூழலால் பள்ளி செல்லாமல் குழந்தைப் பருவத்தில் வேலைக்குச் சென்ற நாங்கள், அதே பொருளாதாரச் சூழலால் உயர் கல்வியைத் தவறவிட்டு விடுவோமா என்று அஞ்சுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள், தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அலுவலகத்தை 044 - 24326205 என்ற தொலைபேசி எண்ணிலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீட்ண்ப்க்ப்ஹக்ஷர்ன்ழ்ஃஹ்ஹட்ர்ர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment