Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 27 October 2013

விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள் உதவி பேராசிரியர் பணிக்கு நெட் தகுதித்தேர்வு


இந்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்காக யுஜிசி நடத்தும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாள்.இந்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்காக யுஜிசி ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு முறை தேர்வு நடத்துகிறது. உதவி பேராசிரியர் பணி, உதவித் தொகையுடன் இளநிலை ஆராய்ச்சியாளர் ஆகியவற்றிற்கு தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு டிச.29ம் தேதி நாடு முழுவதும் 84 பல்கலைக்கழகங்கள் சார்பில் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், சென்னை, மதுரை காமராஜர், புதுச்சேரி ஆகிய பல்கலைக்கழகங்கள் நெட் தகுதித் தேர்வை ஒருங்கிணைக்கும் கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

79 பாடங்களுக்கு நெட் தேர்வு எழுதலாம்.முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் போதுமானது. உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்காக தகுதித்தேர்வு எழுதுபவர்கள் 1.12.13 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ஸீ450ம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஸீ225ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 110ம் செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்வுக்கு யுஜிசியின் இணையதளம் www.ugc.ac.in   மற்றும் www.ugcnetonline.in   மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வங்கி செலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அடுத்த வேலை நாளில் ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்துடன் ஸீ20 வங்கி சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை நவ.2ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்த வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பம், நுழைவுச் சீட்டு, வருகை சீட்டு ஆகியவற்றை யுஜிசியின் இணையதளத்தில் நவ.5ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை விண்ணப்பதாரர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழகத்திற்கு நவ.9ம் தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment