Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 27 October 2013

தனி கவனம் செலுத்த உத்தரவு 40க்கு குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. கடந்த மார்ச் 2011ல் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 85.30 சதவீதம்  தேர்ச்சியும், பிளஸ் 2 தேர்வில் 85.90 சதவீத தேர்ச்சியும் இருந்தது. மார்ச் 2012ல் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 86.20 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 86.70 சதவீதம் இருந்தது. 2011ம் ஆண்டுக்கான தேர்ச்சி அளவை ஆய்வு செய்து பார்த்ததில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் தேர்ச்சி வீதம் குறைவாக  இருப்பதாக தேர்வுத் துறை கண்டறிந்துள்ளது. எனவே இந்த  ஆண்டு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சியை எட்ட வேண்டும் என்று தேர்வுத்துறை விரும்புகிறது. இதற்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. 


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியரை 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுப்போர் ஒரு பிரிவாகவும், 40 மதிப்பெண் வரை எடுப்போர் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது பிரிவில் உள்ள மாணவ மாணவியரில்(சராசரி பிரிவு) 40 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவோரை 60க்கும் மேல் மதிப்பெண் பெற வைப்பது. 40க்கும் குறைவாக மதிப்பெண் எடுப்போரை 55 மதிப்பெண்ணுக்கும் மேல் மதிப்பெண் எடுக்க வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 40 அல்லது அதற்கும் கீழ் மதிப்பெண் எடுப்போருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு வகுப்புகள் பள்ளி விடுமுறை நாட்களில் நடத்துவது. காலாண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நடத்துவது. இந்த இரண்டு பருவத்துக்குள் முடிக்க வேண்டிய பாடங்களில் ஏதாவது விடுபட்டு இருந்தால் அதையும் சேர்த்து சிறப்பு வகுப்புகளில் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட அளவில் வினா வங்கியை தயார் செய்து அவற்றை கொண்டு சராசரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சிறு சிறு தேர்வுகள் நடத்தி பழக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வினா வங்கி புத்தகங்கள் இந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டுள்ள மாதிரி வினா வங்கி புத்தகம், தீர்வுப் புத்தகங்கள் துணையுடன் பயிற்சி அளிக்கப்படும். 

பிளஸ் 2 வகுப்பை பொறுத்தவரை கணக்கு, இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் நடத்துவது, கடினப் பகுதிகளுக்கு எளிதில் தீர்வு காணும் வழிகளை சொல்லிக் கொடுத்தல், மாணவர்களுக்கு புரியாத பகுதிகளை மேற்கோளுடன் நடத்துவது  ஆகியவை இந்த சிறப்பு பயிற்சியில் மேற்கொள்ளப்படும். தற்போது காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதால் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் இந்த மாதமே தொடங்கவும், தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. விரைவில் இந்த வகுப்புகள் தொடங்க உள்ளன. எனவே விடுமுறை நாட்களிலும் வகுப்புகள நடக்கும். அதனால் 40 அல்லது அதற்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கட்டாயமாக சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் களம் இறங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment