Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 3 October 2013

1 லட்சம் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் தடுப்பு பயிற்சி - நன்றி : தினகரன்


பள்ளிகளில் நடக்கும் சைபர் கிரைம்களை தடுப்பது, விசாரிப்பது தொடர்பாக 1 லட்சம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த வகைபயிற்சி அடுத்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் சில நேரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் பள்ளிகளில் நடந்துவிடுகின்றன. 

இதை தொடர்ந்து குழந்தைகளின் உரிமையை பாதுகாப்பது, இளம் சிறார்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக கடந்த ஆண்டு அரசு ஒரு உத்தரவு போட்டது. அதன்படி தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு, பணி நீக்கம் அல்லது அவர்களின் சான்றுகளை ரத்து செய்வது ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 15 மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்  மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தவறாக நடந்த சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், சைபர் கிரைம்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பது, அது குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 500 ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி அடுத்த வாரம் சென்னையில் தொடங்குகிறது. போலீஸ் துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்த பயிற்சி அளிக்கின்றனர்.

இதற்கு முன்னோட்டமாக பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்துக்குள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment