தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதால் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி தொழிலாளர் ஆய்வாளர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட இருக்கிறது. புத்தகங்கள் வாங்குவதற்கு 11-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், சட்ட, விவசாயம் பட்டதாரி ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்ட படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாண- மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, 10, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
31-ந் தேதி கடைசி நாள்
இத்திட்டங்கள் தொழிலாளர் நலநிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேற்படி கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந் தேதியாகும். நல திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், த.பெ. எண் 718, சென்னை-6 என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால்களை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment