நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மேலப்பட்டி தொடக்கப்பள்ளியின் 5 ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியான பால் பதனிடுதல் முறையை அறிவதற்காக களப்பயணமாக மோகனூர் ஒன்றியம் இலத்துவாடியில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. கா. இளங்கோ அவர்களின் துணையுடன் சென்றிருந்தனர். பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்த ஊழியர்களும் அதிகாரிகளும் குறிப்பாக அதன் பொறியியளாரும் மிக அன்போடும் பாசத்தோடும் எங்கள் மாணவர்களுக்கு அதன் நடைமுறைகளை அனைத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் விளக்கியதை கண்டும் அதனை எங்கள் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பி சக மாணவர்களிடம் பூரிப்பாகவும் வியப்பாகவும் பெருமையாகவும் பகிர்ந்து கொண்டதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
தொடக்கப்பள்ளியில் பயிலும் 5 ம் வகுப்பு மாணவர்கள் தானே என்று அலட்சியம் காட்டாமலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தானே என்று கருதாமலும் மிகவும் விரிவாகவும் பொறுமையாகவும் அனைத்து செயல்பாடுகளையும் விரித்துரைத்த பொறியாளர் அவர்கள் நிறைவில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? சந்தேகம் உள்ளதா? என்று கேட்டு கேட்டு அச்சந்தேகங்களை நிவர்த்தி செய்த விதம் கண்டு மிக்க மகிழ்ச்சியும் அவரின் அன்புக்கு மிகப் பெரிய ராயல் சல்யூட் ஒன்றும் பள்ளியின் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
No comments:
Post a Comment