கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டம் (Central Advisory Board of Education - CABE) அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மதிய உணவுத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கும்படி மாநிலங்கள் கோரிய நிலையில், அத்திட்டத்தை தரமான வகையிலும், பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்துவது முக்கியம் என்று மத்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.மதிய உணவுத் திட்டத்தை, வட மாநிலங்களைவிட, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது. மதிய உணவுத் திட்டம் தவிர, கட்டாய கல்வி சட்டம், ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட விவகாரங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே சூடான விவாதத்தை ஏற்படுத்தின. மொத்தத்தில், குழந்தைகளுக்கு தரப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்று CABE கண்டிப்புடன் தெரிவித்தது.அதேசமயம், மாநில பல்கலைகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட RUSA திட்டத்திற்கு கூட்டத்தில் ஏகமனதாக வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment