தமிழ்நாட்டில் 535 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி துறை தெரிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரம் உயரும் என்று உறுதியாக கூற முடியாது.
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களின் பாற்றக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. எனவே மாணவர்கள் சரியான கல்வியை பெற முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள, சமீப காலமாக ஆன்லைன் பொறியியல் கல்வியை நாடி வருகின்றனர். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தங்களது கற்பித்தல், கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த (MOOCs)திறந்த ஆன்லைன் முறையை நாடி செல்கின்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஐஐடி.,யின்-என்பிடிஇல், எம்ஐடி போன்ற தளங்களில் அந்தந்த துறை நிபுணரிடம் இலவசமாக பாட விளக்கங்களை கற்று கொள்ள இந்த முறை உபயோகமாக இருக்கும் என்று கோரப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக, காளான் போன்று ஆங்காங்கே பொறியில் கல்லூரிகள் அதிகரித்துள்ளது. ஆனால் ஏஐசிடிஇ அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களை நியமிக்காதது வேதனைக்குறிய ஒள்றாகும்.
No comments:
Post a Comment