Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 22 October 2013

வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது : கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆய்வு


திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.ஜி.எஸ்.ஒய். அரங்கில் வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயஸ்ரீ முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது-
சரிபார்க்கும் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் பெங்களுர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பொறியாளர்களான ரமேஷ்பாபு, சுனில் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்களைக் கொண்டு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் முதல்கட்ட பணி நடைபெறுகிறது.
திருச்சி மாவ,ட்டத்தில் 3122 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 4052 கட்டுப்பாட்டுக் கருவிகளும் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி வீடியோ ஒளிப்பதிவு மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.

No comments:

Post a Comment