Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 21 October 2013

பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது


மழை சீசன் தொடங்கி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, பழைய பழுதான கட்டிடங்களில் வகுப்பறைகள் நடந்தால், அதில் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எம்பி, எம்எல்ஏ நிதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை திறக்கப்படாமல் இருந்தால் அந்த வகுப்பறைகளை மழை காலங்களில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களில் பழுதுகள் இருந்தால் நீக்கி கவனமாக பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாலை நேரங்களில் மழை வர வாய்ப்பு இருந்தால், மாணவர்களை முன்னதாகவே வீடுகளுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை சீசன் முடியும் வரை மழையால் தேவையற்ற இடையூறுகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க போதிய 
முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment