Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 14 January 2014

பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு


 பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த  ஆண்டில் பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், ஆங்கில வழியில் படிக்கும் பிசி, ஓசி பிரிவை சேர்ந்த மாணவர்களின் பெற்றோரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால், அந்த வகை மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். 

செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் தேர்வு எழுதுவோர் தேர்வுக் கட்டணம் ரூ.225, மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதுவோர் ரூ.175 செலுத்த வேண்டும். டிஎம்எல் மதிப்பெண் பட்டியலுக்காக அனைவரும் தலா ரூ.300 செலுத்த வேண்டும். 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் இதை செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.கட்டணம் அனைத்தும் கருவூலம் மூலம் செலுத்த வேண்டும். அதற்கான படிவங்களை தேர்வுத்  துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. 

ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து கருவூலத்தில் செலுத்தி அந்த ரசீதுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 வகுப்புக்கான மாணவர்கள் பட்டியல்(நாமினல் ரோல்) தேர்வுத்துறை வாங்கியுள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான மாணவர்கள் பட்டியல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்து விட்டது.

No comments:

Post a Comment