கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ரூ10 ஆயிரம் கூடுதல் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment