சிறப்பு வகுப்புக்கு வராததால், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் கூறியதால், ஆத்திரமடைந்த மாணவன் கண்ணாடியில் ஓங்கி குத்தி அவனது கை நரம்பு துண்டித்தது.கொத்தவால்சாவடி தங்க சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில், 10ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. திங்கட்கிழமை பள்ளிக்கு சென்ற 3 பேரிட மும், பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கப்படுவீர்கள் என ஆசிரி யர் கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் பெற்றோரை அழைத்து செல்லவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தலைமை ஆசிரியர் அறை அருகில் 3 மாணவர்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது, தலைமை ஆசிரியர் அறையின் உள்ளே சென்ற ஒரு மாணவன் அங்கிருந்த கண்ணாடியில் ஓங்கி குத்தினான். இதில், அவனது கை நரம்பு துண்டித்து ரத்தம் சிந்தியது. வலியில் மாணவன் அலறி துடித்தான். ஆசிரியர்கள், அவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment