Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 12 January 2014

இந்தியாவில் விபத்துகளில் தமிழகம் முதலிடம்

 இந்தியாவில் 2013ம் ஆண்டு, 4 லட்சத்து 40 ஆயிரம் விபத்துகள் நடந்ததில், 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் இறந்துள்ளனர். விபத்துகளில், மாநில அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு கருத்தரங்கில், எலும்பு முறிவு தலைமை டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் பேசியதாவது: இந்தியாவில், கொள்ளை நோய், பெரிய அம்மை போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளது. நோய்களால் இறப்பவர்களை விட, விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2013ல், இந்தியாவில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 42 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 91 பேர் இறந்துள்ளனர். விபத்துகளில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சென்ற ஆண்டில், தமிழகத்தில் நடந்த 67 ஆயிரத்து 757 விபத்துகளில், 16 ஆயிரத்து 175 பேர் பலியாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. இதில் 75 சதவீதம் விபத்துகள், இரவு, 7:00 முதல், அதிகாலை 6:00 மணிக்குள் நடந்துள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போன் பேசிக்கொண்டும், தூக்கம் இல்லாமலும் வாகனங்கள் ஓட்டுவது, வாகனங்களின் பெருக்கம், தரமான சாலைகள் இல்லாதது, விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. 16 முதல், 36 வயதுக்குட்பட்டவர்களே விபத்தில் இறக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment